நூன்முகம்

திருவருட்ப்ரபந்தம் என்ற இந்நூல் அருட்கவி திரு. சீதாராமய்யங்கார் அவர்கள் அடியிற்கண்ட தலைப்பில் சார்ற்றியுய்ந்த கவிதைகளின் தொகுப்பு

பாசுரங்கள்

1. நூற்றெட்டுத் திருப்பதி நூதன நுட்பத் திருமாலை என்ற துவாதச மாலை.

2. திருவேங்கடத் திருப்பதிப் பாசுரங்கள்.

3. அபிமானஸ்தலங்களின் பாசுரங்கள்.

4. தனிப்பாசுரங்கள்.

5. சித்திரக்கவி

கீர்த்தனங்கள்

6.நூற்றெட்டுத் திருப்பதி திருவருட் கீர்த்தனாமிருதம்.

7. திருவேங்கடத் திருப்பதிக் கீர்த்தனங்கள்.

8. அபிமானஸ்தலங்களின் கீர்த்தனங்கள்.

இந்நூலாசிரியர் தமிழ் இலக்கணத்திலும், இலக்கியத்திலும் மிகுந்த தேர்ச்சிபெற்ற கவிதைகள் எழுதும் ஆற்றல் உடையவர். முக்கியமாக அவருக்கு மரபுக்கவிதைகள் எழுதுவது மிகச் சுலபமாக இருந்தது.

இந்த நூற்றாண்டில் மரபுக்கவிதை எழுதுவது குறைந்து வருகிறது. மரபுக்கவிதை எப்பொழுதும் நிலைத்து நிற்க வேண்டும் என்ற் அவா உடன் இந்நூலாசிரியர் இதை இயற்றி இருக்கிறார். யாப்பிலக்கணத்திற்கு இணங்க கவிதைகள் இயற்றுவது எவ்வளவு மேம்பாடு என்பது கற்றவர்கள் அறிவர். கவிஞனின் எண்ண ஓட்டத்தை வார்தைகளால் செய்யுள் வடிவத்தில் யாப்பிலக்கணத்திற்கு மிகப்பாண்டித்யம் வேண்டும். அதிலும் வெண்பா எழுதுவது மிகக்கடினம்.

இந்நூலாசிரியர் பல வெண்பாக்கள்  இயற்றிருப்பது மிக்கப்போற்றப்பட வேண்டியது. யாப்பிலக்கணத்தில் கண்டகவி வகைகள் பலவற்றை கவிதிகளின் மேல் ஆசிரியரே குறிப்பிட்டிருப்பது மிகப் போற்றத்தக்கது.

இந்த கவிதை தொகுப்பில் கீழ்க்கண்ட கவிவகைகள் குறிக்கப்பட்டிருகின்றன.

1. இருவிகற்ப ஆசிடை நேரிசை வெண்பா.

2. ஒருவிகற்ப ஆசிடை நேரிசை வெண்பா.

3. இருவிகற்ப இருகுறள் நேரிசை வெண்பா.

4. இருவிகற்ப இன்னிசை வெண்பா.

5. ஒருவிகற்ப இன்னிசை வெண்பா.

6. பலவிகற்ப இன்னிசை வெண்பா.

7. ஒருவிகற்ப இருகுறள் நேரிசை வெண்பா.

8. குறள் வெண்பா.

9. பஃறொடை வெண்பா.

10. குறளடி வஞ்சிப்பா.

11. ஆசிரிய விருத்தம்.

12. காரிகை.

13. திருப்புகழ்.

14. சிந்து.

17. சித்திரக்கவி

இன்னும் பல.

இப்பொழுது இருக்கும் மரபுக்கவிதைகள் படிக்கும்போது ஆனேச்கமாக எந்த வகைக் கவிதை என்று குறிப்பிடப்படுவதில்லை. சில நூல்களில் குறிப்பிட்டிருந்தாலும், அவைகளை பொதுவாக வெண்பா, விருத்தம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். யாப்பிலக்கணத்தில் சொல்லப்பட்டிருக்கின்ற கவிதை வகைகளுக்கு உதாரணம் கண்டுபிடிப்பது சற்று கடினம். யாப்பிலக்கணம் கற்றோருக்கு எளிதக ஒவ்வொரு கவி வகைகளும் உதாரனம் இந்நூலாசிரியரின் கவிதைகளில் இருந்து எடுக்கலாம். இது கவிதை இலக்கணதிற்கு செய்த சிறந்த தொண்டு.

Book Review

The book "Thiruvarutprabandam"  was written in Tamil by Arutkavi Thiru. Seetharama Iyengar in early twentieth century.  It  has 1646 verses (venpas) and more than 144 keerthans and 6 Chitrakavis. Vaishnava philosophy and devotion are passionately adored in this book. The author has made 12 garlands of poems a garland has 9 sections (9 temples) and made of 108 flowers (venpas).

துவாதச மாலை

நூற்றெட்டுத் திருப்பதி நூதன நுட்பத் திருமாலை என்ற துவாதச மாலை கவிதைகளை ஸ்ரீமத்பகவானுக்கு 12 மாலைகளாக தொடுத்து ஒவ்வொரு மாலைக்கும் தொங்கலும் சேர்த்து 12 கவிதை மாலைகள் இயற்றியிருக்கிறார்.இவர் ஒவ்வொரு பாசுரமும் தெய்வ மணங்கமழும் மலர்ககளாக தொடுத்து காண்பித்திருக்கிறார்.

துவாதச மாலை

கீர்தனங்கள்

நூற்றெட்டு திவ்ய தேசத்தில் 105 ஸ்தலத்திற்கு மட்டும் கீர்த்தனைகள் அமைந்திருக்கின்றன. இதில் வைதியம், வாகடம், வேதசாஸ்திரம், வசிஷ்டாத்வைதம், யோகம், ஞானம், பக்தி, ஸ்தல மகிமை,போன்ற் அரிய விஷயங்களை குறிப்பிட்டிருக்கின்றார். திருவேங்கடத் திருப்பதியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ அலமேலுமங்கா சமேத அருள்மிகு ஸ்ரீ வேங்கடேச பெருமாள் மீது பாடிய கீர்த்தனங்கள் 13.

 

நூன்முகம்

திருவருட்ப்ரபந்தம் என்ற இந்நூல் அருட்கவி திரு. சீதாராமய்யங்கார் அவர்கள் சார்ற்றியுய்ந்த கவிதைகளின் தொகுப்பு.

இந்நூலில் 1646 பாசுரங்களும், 144 கீர்தனங்களும், 6  சித்திரகவிகளும் அமைந்துள்ளன.

நூன்முகம்

Contact Us

41072, DLF Gardencity, OMR, Chennai - 600130. 9884053442

Quick Contact

Go to top