The book "Thiruvarutprabandam" was written in Tamil by Arutkavi Thiru. Seetharama Iyengar in early twentieth century. It has 1646 verses (venpas) and more than 144 keerthans and 6 Chitrakavis. Vaishnava philosophy and devotion are passionately adored in this book. The author has made 12 garlands of poems a garland has 9 sections (9 temples) and made of 108 flowers (venpas).
நூற்றெட்டுத் திருப்பதி நூதன நுட்பத் திருமாலை என்ற துவாதச மாலை கவிதைகளை ஸ்ரீமத்பகவானுக்கு 12 மாலைகளாக தொடுத்து ஒவ்வொரு மாலைக்கும் தொங்கலும் சேர்த்து 12 கவிதை மாலைகள் இயற்றியிருக்கிறார்.இவர் ஒவ்வொரு பாசுரமும் தெய்வ மணங்கமழும் மலர்ககளாக தொடுத்து காண்பித்திருக்கிறார்.
நூற்றெட்டு திவ்ய தேசத்தில் 105 ஸ்தலத்திற்கு மட்டும் கீர்த்தனைகள் அமைந்திருக்கின்றன. இதில் வைதியம், வாகடம், வேதசாஸ்திரம், வசிஷ்டாத்வைதம், யோகம், ஞானம், பக்தி, ஸ்தல மகிமை,போன்ற் அரிய விஷயங்களை குறிப்பிட்டிருக்கின்றார். திருவேங்கடத் திருப்பதியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ அலமேலுமங்கா சமேத அருள்மிகு ஸ்ரீ வேங்கடேச பெருமாள் மீது பாடிய கீர்த்தனங்கள் 13.
திருவருட்ப்ரபந்தம் என்ற இந்நூல் அருட்கவி திரு. சீதாராமய்யங்கார் அவர்கள் சார்ற்றியுய்ந்த கவிதைகளின் தொகுப்பு.
இந்நூலில் 1646 பாசுரங்களும், 144 கீர்தனங்களும், 6 சித்திரகவிகளும் அமைந்துள்ளன.
41072, DLF Gardencity, OMR, Chennai - 600130. 9884053442